அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் போக்குவரத்துறை அதிரடி உத்தரவு.. மீறினால் நடவடிக்கை.!!
Government bans bus drivers from using call phones on duty
தமிழகத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என கண்டித்து சில வழிகாட்டு நெறிமுறைகளை போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அரசு பேருந்து ஓட்டுனர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. இதையும் மீறி செல்போன் பேசிக்கொண்டே சாலையில் வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனை தடுக்க பலவித கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தாலும், விபத்துகள் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.
இந்நிலையில், அரசு பேருந்து ஓட்டுனர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது. நடத்துனர்கள் பின் இருக்கையில் அமர்ந்து இரண்டு படிக்கட்டுகளையும் கவனிக்க போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.
English Summary
Government bans bus drivers from using call phones on duty