பெரும் சோகம்! கடலூரில் அரசு பேருந்து கொடூர விபத்து! ஓட்டுநர் பலி! 22 படுகாயம்! - Seithipunal
Seithipunal


கடலூர் அருகே அரசு பேருந்து சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி ஓட்டுநர் பலியாகி உள்ளதாகவும் 22 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை கிளாம்பாகத்தில் இருந்து வேதாரண்யம் நோக்கி பயணிகளை ஏற்றுக் கொண்டு நேற்று இரவு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தை பச்சையங்காடு பகுதியைச் சேர்ந்த அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் ராஜா என்பவர் ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை ரெட்டிச்சாவடி பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் அதிவேகத்துடன் மோதியதில் பேருந்து முன் பக்கம் முழுவதும் சேதம் அடைந்து ஆக்சில் முறிந்து டயர் கழண்டு ஓடியதாக கூறப்படுகிறது.

மேலும் பேருந்து ஓட்டுனர் ராஜா தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து பஸ் மோதிய வேகத்தில் டிரைவர் மீது கவிந்து ராஜா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியான சம்பவமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கண்டக்டர் உட்பட பேருந்தில் பயணம் செய்த 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சம்பவம் அறிந்து அங்கு சென்ற ரெட்டிசாவடி போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனை மற்றும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

உடல் நசுங்கி பலியான பேருந்து ஓட்டுனர் ராஜாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக காவல்துறை அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government bus collided with a road barrier near Cuddalore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->