ஏர்போட்டிற்கு என்ட்ரி கொடுத்த அரசு பேருந்துகள் - மகிழ்ச்சியில் பயணிகள்.! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு பருவமழையால், சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . அதன் படி அதிகப்படியாக பெய்த கனமழையால், மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் போக முடியாத அளவிற்கு அவதிப்பட்டுள்ளனர். சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாடகை கார் ஓட்டுவோர், ஆட்டோ ஓட்டுபவர்கள் பலர் சேவையை ஏற்கவில்லை. 

மேலும், ஓலா, உபேர் போன்ற கால் டாக்ஸி சேவைகளும் நேற்று சென்னையில் பல பகுதிகளில் வேலை செய்யவில்லை. அதிலும் குறிப்பாக சென்னை விமான நிலையம் பகுதிகளில் கால் டாக்ஸி சேவைகளே இல்லை. இதையடுத்து கனமழை காரணமாக தனியார் வாடகை கார்கள் சவாரி எடுக்க மறுப்பதாக விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அரசுக்கு புகார் தெரிவித்தனர்.

இந்த புகாருக்கு உடனே நடவடிக்கை எடுத்த தமிழக அரசு, தாம்பரம் வழித்தடத்தில் செல்லும் அரசுப் பேருந்துகளை விமானங்களின் வருகை நேரத்திற்கு ஏற்றவாறு விமான நிலையத்திற்கு உள்ளே சென்று பயணிகளை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தது. 

இன்றும் இதே போல் மாநகரப் பேருந்துகள் சென்னை விமான நிலையத்திற்கு இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. விமான பயணிகளுக்கு இந்த பேருந்து சேவை பெரும் உதவியாக இருக்கும். இது தொடர்ந்தால் மிகவும் பயனுள்ளதாக  இருக்கும்" என்று தமிழக அரசுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government bus run in airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->