"அலறியடித்து ஓடிய அரசு கல்லூரி மாணவிகள்"....."கழிவறையில் சாரை சாரையாக பாம்புகள் இருந்ததால் அதிர்ச்சி " - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை அருகே, அரசு கல்லூரி பெண்கள் கழிவறையில் சாரை சாரையாக பாம்புகள் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதனை மாணவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட நிலையில், தற்போது இது வைரலாகி வருகிறது. 


திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் காலை மதியம் என இரண்டு 2 முறை சுழற்சி அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த கல்லூரியில் சுமார் 8000 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.  

இந்நிலையில் இந்த கல்லூரியில் உள்ள பெண்கள் கழிப்பறை நீண்ட நாட்களாக பயன் பாடின்றி இருந்ததாக சொல்லப்படும் நிலையில், அந்த கழிவறைக்குள் சில மாணவிகள் சென்றுள்ளனர். அப்போது அங்கு ஒரு கழிவறையில் சாரை சாரையாக பாம்புகள் இருந்ததை கண்டு அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்த மாணவிகள், மற்ற மாணவர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே சில மாணவர்கள் கழிவறையில் பாம்புகள் இருந்ததை தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவிட்டுள்ளனர். தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாம்புபுடி நபர்கள் மூலம் கழிவறையில் பாம்புகளை தேடியுள்ளனர்.அப்போது சில பாம்புகள் மட்டு பிடிபட்ட தாகவும் மற்ற பாம்புகளை தேடி வருவதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Government college students who ran away screaming Shocked because there were snakes in the toilet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->