அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணிடம் ரூ.14 ஆயிரம் திருட்டு! அலட்சியமாக பதிலளித்த மருத்துவ ஊழியர்கள்! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர், வாணியம்பாடி அடுத்துள்ள மிட்னாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் (வயது 31) இவர் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். 

இவரது மனைவி பூஜா (வயது 23) கர்ப்பிணியாக உள்ள இவர் நேற்று வழக்கம்போல் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார். 

பரிசோதனை செய்து முடிந்த பிறகு மாத்திரை வாங்குவதற்கு வரிசையில் நின்று கொண்டிருந்தார். கூட்டம் அதிகமாக இருப்பதால் பூஜா அவரது பையை தோளில் மாட்டிக் கொண்டிருந்தார். 

மாத்திரையை வாங்கிவிட்டு பையை பார்த்தபோது திறந்து கிடந்தது. மேலும் பையில் வைத்திருந்தார் ரூ. 14,000 பணத்தை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றது தெரிய வந்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த பூஜா அங்கிருந்தவர்களிடம் விசாரித்து அங்கேயே கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார். அங்கிருந்த பொதுமக்கள் இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

இது தொடர்பாக மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்யும்படி மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்த போது கேமரா வேலை செய்வதில்லை என அலட்சியமாக பதிலளித்தனர். 

இதனை அடுத்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அரசு மருத்துவமனையில் பொதுமக்களின் நலனுக்காக பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக்கு கேமரா வேலை செய்யாததால் பல்வேறு குற்ற சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

எனவே பொதுமக்களின் நலன் கருதி கண்காணிப்பு கேமராக்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்திள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government hospital pregnant woman robber


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->