அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ED ரெய்டு!
government sand quarry contractors houses ED raids
புதுக்கோட்டை அரசு மணல் ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் அமலாக்க துறையை அதிகாரிகள் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை, அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் அமலாக்க துறை அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தி இருந்த நிலையில் இன்று காலை மீண்டும் இரு ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
முத்துப்பட்டினத்தில் உள்ள எஸ். ராமச்சந்திரன் மற்றும் குழத்திரான்பட்டியில் உள்ள கரிகாலன் ஆகியோரின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனையின் போது மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த சோதனை பகல் 1 மணி அளவில் முடிவடைந்ததாக தகவல் வெளியாகிஉள்ளது.
இதுபோன்ற துப்பாக்கி ஏந்திய மத்திய ஆய்வு படை போலீசாரின் பாதுகாப்புடன் திண்டுக்கல்லில் உள்ள தொழிலதிபர் வீட்டிலும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
English Summary
government sand quarry contractors houses ED raids