மாணவர்களை கண்டித்த ஆசிரியர்கள்: இடைநீக்கம் மற்றும் இடமாற்றம் செய்த  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்..! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியை அடுத்த சேவூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

அப்பள்ளியில், படிக்கும் பிளஸ் 1 மாணவர் ஒருவர், சில நாட்களுக்கு முன்பு பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது, நண்பர்களுடன் சிகரெட் குடித்து, மாணவியரின் முகத்தில் புகையை விட்டு கேலி செய்துள்ளனர். அதில், பாதிக்கப்பட்ட மாணவியர், அவர்களது பெற்றோர், ஆசிரியர்களிடம் இதனை தெரிவித்தனர்.

இதையடுத்து, ஆசிரியர்கள் புகைப்பிடித்த மாணவரை கண்டித்துள்ளனர். அப்போது அவர்களுக்கு உள்காயம் ஏற்பட்டதாக தெரிவித்து, ஆரணி அரசு மருத்துவமனையில் மாணவரை சேர்த்த பெற்றோர், ஆரணி போலீசில் புகாரளித்தனர்.

இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, பள்ளியில் புகார் பெட்டி ஒன்றை வைத்து மாணவ, மாணவியரிடம் கருத்து கேட்டார். அதன் அடிப்படையில், நேற்று இரண்டு ஆசிரியர்களை இடைநீக்கம் செய்தும், ஒருவரை கேளூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும்,  மற்றொருவரை முள்ளண்டிரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் இடமாற்றம் செய்து,  உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government school teachers suspend


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->