அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: பிளான் போட்ட பள்ளி கல்வித்துறை!
Government Schools admission start march1
தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாணவர்களை அரசு பள்ளிகளை நோக்கி ஈர்க்கும் விதமாக 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை வருகின்ற மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் 5 வயது பூர்த்தி அடைந்த பள்ளி குழந்தைகள் அனைவரையும் அரசு பள்ளியில் சேர்ப்பதற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள் அனைவரும் அரசு பள்ளிகளிலும் தரமான கல்வி வழங்கப்படுவதை அறியும் விதமாக பேனர்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் தெரியப்படுத்த வேண்டும்.
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதி, நலத்திட்டம் போன்றவை குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும்.
5 வயதுடைய குழந்தைகளின் பெற்றோர்களிடம் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வருகின்ற கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அலுவலர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Government Schools admission start march1