அண்ணாமலையார் கோவிலில் ஆளுநர் ரவி! குடும்பத்துடன் சுவாமி தரிசனம்! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவிலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.

திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் நேற்று குடும்பத்துடன் வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார். 

ஆளுநர் ரவி இரண்டு நாள் பயணமாக திருவண்ணாமலைக்கு நேற்று முன்தினம் வந்தார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள குபேர லிங்கம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் சாதுக்கல் மற்றும் மூக்குப்பொடி சித்தர் மற்றும் இயற்கை விவசாயிகள் ஆகியோருடன் அவர் பேசினார். 

ரமணர் ஆசிரமம் மற்றும் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்துக்கு சென்று குடும்பத்துடன் வழிபட்டார். இதனை அடுத்து அண்ணாமலையார் கோவிலுக்கு குடும்பத்துடன் நேற்று காலை ஆளுநர் சென்று மூலவர் சன்னதி, உண்ணாமலை அம்மன் மற்றும் பாதாள லிங்கத்தை தரிசனம் செய்தார். 

கிரிவலப் பாதையில் சிறிது தூரம் நடந்து சென்ற ஆளுநர், ஜவ்வாது மலை குனிகாந்தூர் கிராமத்தில் மலைவாழ் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

பின்னர் நேற்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவி, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டைக்கு புறப்பட்டு சென்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor Ravi in ​​Anaimalaiyar Temple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->