#BREAKING || நீட் விலக்கு மசோதாவுக்கு கையெழுத்திட மாட்டேன்! தமிழக ஆளுநர் திட்டவட்டம்.!! - Seithipunal
Seithipunal


'எண்ணித் துணிக' என்ற தலைப்பில் ஆளுநர் மாளிகை நடத்தும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நீட் இளநிலை தேர்வு 2023ல் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் சுமார் 100 பேர் ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். 

தமிழகத்தில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களில் நீட் தேர்வில் அதிகபட்சமாக 561 தான் என்பதால் அரசு பள்ளி மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியிடம் சேலத்தைச் சேர்ந்த ஒரு மாணவரின் பெற்றோர் "எங்கள் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். 

இருப்பினும் தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். அதன் அடிப்படையில் நீட் தேர்வில் இருந்து விலக்குக்கான ஒப்புதலை எப்போது கொடுப்பீர்கள்.?" என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி "நீட் தேர்வுக்கு தடை விதிப்பதை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். கல்வி பொதுப்பட்டியில் இருப்பதால் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்காக தனியார் பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சி பெற்று வெற்றி பெற வேண்டிய அவசியம் இல்லை.

பள்ளியில் படிக்கும் போதே பயிற்சி மேற்கொண்டால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம். நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்பது மாணவர்களின் திறனை கேள்விக்குறியாக்கும் செயலாக அமைகிறது. நீட் தேர்வுக்கு முன்பு 20 முதல் 30 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். ஆனால் நீட் தேர்வு வந்த பிறகு அது கணிசமாக அதிகரித்துள்ளது" என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பதிலளித்துள்ளார்.

தமிழக அரசு தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியின் இத்தகைய பேச்சு அரசியல் ரீதியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor ravi said that he will not approve neet ban bill


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->