அவையில் பேசியதை வீடியோவாக வெளியிட்ட ஆளுநர்.! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


இன்று 2024 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி தமிழக அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட உரையை புறக்கணித்தார். 

பின்னர், சபாநாயகர் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். ஆளுனரின் இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 

இதற்கிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பரேவையில் பேசிய வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, தமிழக ஆளுநர் சட்டப்பேரவையில் தான் பேசியதை, அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதியை வீடியோவாக, ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ சமூக வளைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

governor rn ravi vedio published


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->