தமிழ்நாட்டில் சாதிய பாகுபாடு அதிகரித்து வருகிறது! ஆளுநர் ஆர்.என் ரவி வேதனை! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் நந்தனார் குருபூஜை விழா இன்று நடைபெற்ற நிலையில் அதில் தமிழக ஆளுநர் ரவி கலந்து கொண்டார். இந்த குரு பூஜையின் போது ஆதிதிராவிடர்களுக்கு பூணூல் அணியும் விழாவும் நடைபெற்றது. இந்த விழா மேடையில் பேசிய தமிழக ஆளுநர் ரவி நந்தனாருக்கு சிவபெருமானை நேரடியாக காட்சி அளிக்கும் வகையில் வாழ்ந்தவர்.

அவருடைய குருபூஜையில் நான் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன். நந்தனார் போன்ற முனிவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து தான் தோன்றியுள்ளனர். நம் அனைவரின் மனதிலும் கடவுள் குடியிருக்கும் போது நம்முள் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடு எவ்வாறு இருக்கும். 

யாரும் உயர்ந்தவர்களோ தாழ்ந்தவர்களோ அல்ல, அனைவரும் சமமானவர்கள். பின்னர் வந்த மனிதர்கள் பிரிவினை ஏற்படுத்திவிட்டு மாபெரும் பிரிவை சூத்திரர்கள் என பிரித்து வைத்தது அவமானகரமான செயல்.

அதில் இருந்து நாம் அனைவரும் விடுதலை அடைய வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் பிறகும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் வேறுபாடுகள் இருப்பது வேதனை அளிக்கிறது. எல்லா பகுதிகளிலும் சாதி பாகுபாடுகள் உள்ளது. தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை கேட்கும்போது என் மனம் வேதனை அடைகிறது.

சாதியால் மட்டுமில்லாமல் பொருளாதாரம், அரசியலிலும் பாகுபாடுகள் ஏற்படுகிறது. இந்த சமுதாயத்தில் ஆலயத்தில் பிரவேசிக்க தடை என்பது இந்து மதத்திலோ, சனாதன தர்மத்திலோ இல்லை. வேங்கைவயலில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடிக்கும் குடிநீரில் மலத்தை கலக்கிறார்கள். நாங்குநேரில் 12ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர்கள் பாராட்டியதால் மாற்று சமூதாய மாணவர்கள் அவனை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

அதிகபட்சமான வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவது இல்லை. தமிழகததில் குற்றசெயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்ற பெண், பட்டியலினத்தவர் என்பதால் பதவியேற்க முடியவில்லை. இந்த சாதிய கொடுமைகள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது." என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor RNRavi anguish caste discrimination increasing in TamilNadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->