உதயநிதி சர்ச்சை பேச்சு விவாகரம்! ஒரே போடாக போட்ட ஆளுநர் தமிழிசை! - Seithipunal
Seithipunal


உதயநிதி ஸ்டாலின் தவறாக பேசிவிட்டு மறுபடியும் அதையே சொல்லிக் கொண்டிருப்பதாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு, பாஜக மட்டுமில்லாமல், திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்களே கண்டனம் தெரிவித்துக்கும் நிலை உருவாகியுள்ளது.

முதலில் மொட்டையாக சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய உதயநிதி, பின்னர் நான் இந்து மதத்தை எதிர்க்கவில்லை, இந்துக்களுக்கு எதிரானவன் இல்லை, அப்படி சொல்லவில்லை, இப்படி சொல்லவில்லை என்று பேட்டி அளித்து வருகிறார்.

இந்த நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "உதயநிதி ஸ்டாலின் தவறாக பேசிவிட்டு மறுபடியும் அதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்.

பெரும்பாலான மக்கள் மனதை புண்படுத்தும் படியான ஒரு கருத்தை சொல்லி உள்ளீர்கள். அவர்களுக்கு சனாதனம் விளையாட்டாக இருக்கலாம், ஆனால் சனாதனத்தை பின்பற்றுபவர்களுக்கு அது விளையாட்டு அல்ல.

பாரத தேசம் என்பது பெருமை சேர்க்கும் ஒன்று. ஆங்கிலேயர்களின் சாயல் எங்கு, எங்கு இருக்கிறதோ அதை கொஞ்சம் கொஞ்சமாக நீக்குவோம் என பிரதமர் மோடி கூறினார்.

அதற்கு ஏற்ப பாரத தேசம் என அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor Tamilisai say about Udhayanithi issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->