கன்னியாகுமரி தொகுதியில் களமிறங்குகிறாரா தமிழிசை? - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணிக்கு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளராக தற்போதைய எம்பி, விஜய் வசந்த் மீண்டும் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. 

அதேபோல் பாஜக சார்பில் விஜய் வசந்தின் நெருங்கிய உறவினரான தமிழிசையை களமிறக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அங்கு போட்டியிட்டு தோல்வியுற்ற முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டியிட வாய்ப்பை எதிர்பார்த்து இருக்கிறார்.

இந்த நிலையில், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அளித்த பேட்டியில், ”கடவுள் கருணை இருந்தால், பாஜக மேலிடம் வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக போட்டியில் இருப்பேன். நான் ஒரு சாதாரண பாரதிய ஜனதா உறுப்பினர். எனக்கு அளிக்கப்பட்ட பணிகளை திறம்பட செய்து முடிப்பேன். எதிர்காலத்தில் பாஜ மேலிடம் என்னை எந்த பதவிக்கும் போட்டியிட நியமித்தாலும் அதனை செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

governor thamizhisai soundarrajan participate kanniyakumari constituency


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->