செவி சாய்த்த ஆளுநர்.. "பாதுகாப்பு வேளாண் மண்டத்தில்" இந்த மாவட்டம்.. விவசாயிகள் நிம்மதி.!! - Seithipunal
Seithipunal


கடந்த 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் கடலுார், புதுக்கோட்டை மாவட்டங்களில் தலா ஐந்து வட்டாரங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு இதற்கான சட்டமும் இயற்றப்பட்டது. அதன் பிறகு மயிலாடுதுறை மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டதால் பாதுகாக்க வேளாண் மண்டலத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் நீண்ட நாட்ட்களாக முன்வைத்து வருகின்றனர்.

இதற்காக, சட்டசபையில், 2023 அக்டோபர் மாதம் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டநிலையில் தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சமீபத்தில்உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ரவியை சந்தித்து பேசினார். அப்போது நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். 

அதற்க்கு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவதாக ஆளுநர் ரவி உத்திரவாதம் அளித்திருந்தார். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட திருத்தத்திற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். ஆளுநர் ரவியின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றதை அடுத்து தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்மையை பாதிக்கும் எந்த பணிகளும் அனுமதிக்கப்படாது. இதனால் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governorravi approves Mayiladuthurai District Protected Agriculture Zone Bill


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->