இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனை அரசு பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துனர் பணியிடைநீக்கம்.! - Seithipunal
Seithipunal


இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனை அரசு பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துனர் பணியிடைநீக்கம்.!

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனும், மதுரையைச் சேர்ந்தவருமான சச்சின் சிவா, சென்னையில் இருந்து மதுரைக்கு வருவதற்காக கடந்த 18-ம் தேதி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசு விரைவு பேருந்தில் எறியுள்ளார்.

அப்போது அந்த பேருந்தின் நடத்துனர் இந்த பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனுமதி இல்லை. பேருந்தில் ஏறக்கூடாது என்றுத் தெரிவித்துள்ளார். அதற்கு சச்சின் சிவா, இதுபோன்ற பேருந்துகளில் பயணிப்பதற்கு அனுமதி உள்ளது என்று பதிலளித்துள்ளார்.

இதைக்கேட்ட நடத்துநர் சிவாவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் மாற்றுத்திறனாளியான சச்சின் சிவாவை நடத்துனர் பேருந்தில் ஏற்றாமல், அப்படியே விட்டு சென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், போலீஸ் முன்பாகவே, சிவாவிற்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து சிவா மற்றொரு பேருந்தில் மிகுந்த சிரமத்துடன் பயணித்துள்ளார். இதனை அங்கிருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

தற்போது இந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சச்சின் சிவா, இதுபோன்ற மாற்றுத்திறனாளிக்கு மிரட்டல் விடுத்து பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துனர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரரை அரசுப் பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துநனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் மாற்றுத்திறனாளி அணியின் கேப்டன் சச்சின் சிவா வீடியோ வெளியிட்ட நிலையில் போக்குவரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt bus conductor suspend for insulted disabled person


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->