மேட்டூரில் புனல் மின் நிலையத்தின் முதல்கட்ட பணிகளை தொடங்கியது கிரீன்கோ நிறுவனம்! - Seithipunal
Seithipunal


மேட்டூரில் ரூ.5947 கோடி மதிப்பில் புனல் மின் நிலையத்தின் முதல்கட்ட பணிகளை கிரீன்கோ எனர்ஜிஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.

சென்னையில் கடந்த 21-ம் தேதி முதலீட்டாளர்கள் மாநாடு  நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், கிரீன்கோ நிறுவனத்துடன் ரூ.20,114 கோடி முதலீட்டில் 3 புனல் மின் நிலையங்களை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.  இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக 3 புனல் மின்நிலையங்கள் மூலம் 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அதன்படி, சேலம் மாவட்டம், மேட்டூரில் ரூ.5947 கோடி மதிப்பில்  கிரீன்கோ எனர்ஜிஸ் நிறுவனம் நீரேற்று புனல் மின் நிலையம் அமைக்கிறது. இதற்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 7 நாட்களில் முதல்கட்ட பணிகளை கிரீன்கோ எனர்ஜிஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.

அதன்படி, ரூ.5947 கோடி முதலீட்டில் மேட்டூரில் உள்ள பாலமலை மற்றும் நவிப்பட்டி ஆகிய கிராமங்களில் மின்நிலையம் அமைக்க கிரீன்கோ எனர்ஜிஸ் நிறுவனம் முடிவு செய்துள்ள நிலையில், இதற்கான கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் கிரீன்கோ எனர்ஜிஸ் விண்ணப்பம் அளித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Greenco Company has started the first phase of Funal Power Station in Mettur


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->