கிருஷ்ணகிரியில் ரூ.4.13 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்..!!! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வழியாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக சூளகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் போலீசார் தீவிரவாத வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சூளகிரி அடுத்த காமன்தொட்டி பகுதியில் நேற்று போலீசார் தீவிரவாத சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவர் வழியாக வந்த மினி லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர்.

போலீசாரை கண்டதும் மினி லாரியின் ஓட்டுனர் மற்றும் அவருடன் வந்த நபர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓட முயன்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரி ஓட்டுனரை மடக்கிப் பிடித்து மினி லாரியை சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஏராளமான குட்கா புகையிலைப் பொருட்கள் கடத்தியது தெரிய வந்தது. இதனை அடுத்து சோதனையில் சிக்கிய ரூ. 4.13 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மினி லாரி டிரைவரை கைது செய்ததோடு தப்பி ஓடிய மற்றொரு நபரை சூளகிரி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gutka goods worth Rs4 lakh seized in Krishnagiri


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->