தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்த வட மாநில வாலிபர் கைது
Gutkha seller arrest in salem
சேலம் மாவட்டத்தில் குட்கா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சக்தேவ் சிங் (31) என்பவர் சேலம் மாவட்டம் மணியனூர் காளியம்மன் கோவில் தெரு பகுதியில் டீக்கடை ஒன்று நடத்தி வருகிறார்.
இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஆன்ஸ், கூல் லிப் போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அன்னதானப்பட்டி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சக்தேவ் கடையில் குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்யவது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து சக்தேவ் சிங்கை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 12 ஆன்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
English Summary
Gutkha seller arrest in salem