சீமான், திருமாவளவனை கைது செய்ய வேண்டும் - ஹச். ராஜா பேட்டி..! - Seithipunal
Seithipunal


பி.எப்.ஐ அமைப்புக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பேசும் சீமான், திருமாவளவன் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா தெரிவித்ததாவது, ''நன்கு விசாரணை செய்து, ஆய்வு செய்த பின்பு பி.எப்.ஐ அமைப்பும் அதன் இணை  அமைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளது.

"பயங்கரவாதத்திற்கு 120 கோடி ரூபாய் கணக்கில் வாங்கி அதை திரும்ப பெற்று பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கொடுத்துள்ளனர்" என்ற தடையங்களைத் திரட்டி அந்த அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

கொலை மற்றும் தீவிரவாத சம்பவங்களில் ஈடுபட்டதன் காரணமாக இந்த எட்டு அமைப்புகளும் தடை செய்யப்பட்டு இருக்கிறது. தடை செய்யப்பட்டுள்ள இந்த அமைப்புகளை ஆதரிப்பது மற்றும் அதற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவிப்பது என்பது தண்டனைக்குரிய செயலாகும்.

பி.எப்.ஐ அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்து வரும் சீமான் மற்றும் திருமாவளவன் ஆகியோரை போலீசார் கைது செய்ய வேண்டும். யாசின் மாலிக் என்பவரை தமிழகத்திற்கு கூட்டி வந்து கூட்டம் போட்ட தேச துரோகி சீமான் நான் திருமாவளவனுக்கு துணை இருப்பேன் என்று சொல்கிறார். இந்த அரசை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றால் உடனடியாக நீங்கள் சீமானையும், திருமாவளவனையும் கைது செய்ய வேண்டும். 

இப்படித்தான் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நிறைய பேர் கொம்பு சீவி விடுவார். ஆனால், பாவம் ஸ்டாலின் ஒரு அப்பாவி. அவர் என் நண்பர் தான் அவருக்கு அகம் புறம்  தெரியாது. அடுத்தவர்கள் கொம்பு சீவி விட்டால் சரி என்று பார்ப்பார். எனவே தேச துரோக பயங்கரவாதிகளுக்காக யாரும் கீழே இறங்கக் கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

H raja press meet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->