சேவிங் ரூ.60, கட்டிங் ரூ.120, கட்டிங்-சேவிங் ரூ.180 - தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த முடிதிருத்த கட்டணம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவர் சமூகம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் கூட்டத்தில், கடை வாடகை மற்றும் மின்கட்டண உயர்வை குறித்து விவாதிக்கப்பட்டது. 

தொடர்ந்து, தமிழகம் முழுவதும் முடிதிருத்தத்திற்கான குறைந்தபட்ச கட்டணத்தில் ரூ.10 உயர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.  

இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் தெரிவிக்கையில், முடிதிருத்தம் உள்ளிட்ட சேவைகளுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை மேம்படுத்தியுள்ளோம். 

கார்ப்பரேட் நிறுவனங்கள் சேவிங் ரூ.49, கட்டிங் ரூ.99 என நிர்ணயிக்கின்றன, இது சிறு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. அவர்களும் திருத்தப்பட்ட கட்டணத்தின்படி, 

சேவிங் ரூ.60, 
கட்டிங் ரூ.120, 
கட்டிங்-சேவிங் ரூ.180, 
சிறுவர் கட்டிங் ரூ.100
எனக் குறைந்தபட்ச கட்டணத்தை பின்பற்ற வேண்டும். 

ஏசி கடைகள் ரூ.10 கூடுதலாக வசூலிக்கலாம். இதை பின்பற்றாமல் விட்டால், தொழிற்சங்க தலைவர்களின் ஆலோசனையுடன் தமிழகம் முழுவதும் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hair cut shop price hike


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->