ஒன்பது நாட்கள் விடுமுறை - குஷியில் பள்ளி மாணவர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 2023-24ம் கல்வி ஆண்டுக்கான அரையாண்டு தேர்வு கடந்த 16-ந்தேதி தொடங்கியது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்கள் மற்றும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடத்தேர்வுகளும் தேதி வாரியாக நடைபெற்றது. 

ஒரு சில மாவட்டங்களில் புயல் மழையால் விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் அடுத்தடுத்த நாட்களில் நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று அனைத்து தேர்வுகளும் முடிவடைந்ததையடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதையடுத்து மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளில் இருந்து புறப்பட்டனர். இதேபோல், விடுதிகளில் தங்கி இருந்து படித்த மாணவர்கள் நேற்று மதியத்துக்கு பிறகு சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதைமுன்னிட்டு நேற்று மாலை பேருந்து, ரெயில்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை வருகிற 1-ந்தேதி வரை ஒன்பது நாட்கள் அளிக்கப்பட்டுள்ளது. 2-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

half yearly exam holiday start in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->