தந்தையர்கள் தாய்க்கும் தாய்கள்..மருத்துவர் அன்புமணி தந்தையர் தின வாழ்த்துக்கள்!! - Seithipunal
Seithipunal


உலக தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தந்தையர் தினத்தை முன்னிட்டு அனைவரையும் தனது தந்தைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கியும் கேக் வெட்டியும் கொண்டாடி வருகின்றனர்.

உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் சினிமா நட்சத்திரங்களும் தந்தையர் தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உலக தந்தையர் தின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

வாழ்த்து செய்தியில் அன்புமணி ராமதாஸ் கூறிவுள்ளதாவது, உலகில் சுமை தாங்கிகள், இடி தாங்கிகள், தடை தாங்கிகள்  என பல உண்டு.  இவை அனைத்தின் நோக்கமும் என்னவென்றால் மனிதர்களைக் காப்பதும், அவர்களின் சுமைகளைக் குறைப்பதும் தான்.

இவை அனைத்தின் பணிகளையும் ஒன்றாகச் செய்யும் ஓர் உன்னத படைப்பு தான் தந்தையர்கள்.  அன்னையரின் தியாகம் குன்றின் மேலிட்ட விளக்காக அனைவருக்கும் தெரியும் என்றால், தந்தையரின் தியாகம் குடத்தின் உள்வைத்த விளக்காக எவருக்கும் தெரியாது.  

ஆம்.... வெளியில் தெரியாமல் அன்பு காட்டுவதிலும்,  தியாகம் செய்வதிலும்,  பிள்ளைகளை  கடிந்து கொண்டதற்காக தங்களைத் தாங்களே வருத்திக் கொள்வதிலும் தந்தையர்கள் தாய்க்கும் தாய்கள்.  அந்த மகாத்மாக்களை உலக தந்தையர் நாளான இன்று போற்றுவோம், வணங்குவோம் என்று இவ்வாறு கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Happy Father Day Doctor Anbumani


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->