சோசியல் மீடியாவில் பழக்கம் - எட்டாம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தனர்.

அதன் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான மாணவியை தேடி வந்தனர். இதற்கிடையே மாயமான மாணவி அவரது தாயாரின் செல்போனை எடுத்து சென்றதால், அந்த செல்போன் மூலம் மாணவியின் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர்.

சம்பவம் குறித்து போலீசார் மாணவியிடம் நடத்திய விசாரணையில், "சமூக வலைதளம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக வாலிபர்கள் சிலர் திருவண்ணாமலைக்கு வரவழைத்து, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதைஎடுத்து போலீசார் இந்த வழக்கை போக்சோ வழக்காக மாற்றம் செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

அதில், மாயமான மாணவியை திருவண்ணாமலையை சேர்ந்த 6 பேர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் விக்னேஷ் உள்ளிட்ட ஐந்து பேரையும் நேற்று கைது செய்தனர். மேலும் ஒருவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

harassment to eight class student in namakkal


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->