பொது மயானம் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது - உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை.!! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டம் புத்தாநத்ததில் இஸ்லாமியர்களுக்கான பொது இடுகாடு இடத்தை சுன்னத்வால் ஜமாத் நிர்வாகித்து வரும் நிலையில் தவ்ஹீத் ஜமாத்தை பின்பற்றும் இஸ்லாமியர்களுக்கென தனி இடுகாடுசெயல் பட்டு வந்தது.. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புதெரிவித்ததால் மூடப்பட்டது.

இதனை தொடர்ந்து தவ்ஹீத் ஜமாத்தை பின்பற்றும்  யாராவது இறந்தால், அவர்களின் உடல்களை சுன்னத்வால் ஜமாத் கட்டுப்பாட்டில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மனுக்களை விசாரித்து நீதிபதி  புகழேந்தி தீர்ப்பு வழங்கியதோடு தனது வேதனையை வெளிப்படுத்து உள்ளார். 

குறிப்பாக இந்தியா சுதந்திரம்அடைந்து 75 ஆண்டுளாகியும் ஜாதி, மதம் கடந்து உடல்களை அடக்கம் செய்ய பொது மயானம் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது. இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு தனித்தனியாக அடக்கம் செய்ய இடங்கள் உள்ளன. இந்துக்களில் எஸ்சி மக்களுக்கு தனியாகவும், பிற ஜாதியினருக்கு தனியாகவும் மயானங்கள் உள்ளன. பிற மதத்திலும் இந்த பாகுபாடு உள்ளது. இறப்பவர்களின் உடல்களை உரிய நேரத்தில் அடக்கம் செய்யாவிடாமல் தடுப்பதால் சடலத்தின் கண்ணியம் பாதிக்கப்படும், சுகாதார பாதிப்பும் ஏற்படுகிறது.

இதனால் இறந்தவரின் உறவினர்கள் அடையும் மன வேதனை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இறந்தவரின் உடல் 24 மணி நேரத்தில் அழுக தொடங்கும். இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி  மனு தாக்கல் செய்ய தூண்டப்பட்டது மரணத்தை விட சோகமானது. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும்.

இறப்பவர்களின் உடல்கள் நம்பிக்கை மற்றும் பழக்க வழக்கத்தை பின்பற்றி அடக்கம் செய்வதை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த சட்டம் கொண்டு வர வேண்டும். இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். இனிமேல் எந்த குடும்பங்களும் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி கோரி நீதிமன்றத்தில் கதவுகளை தட்டாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தனது தீர்ப்பில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

HC Judge agonizing no public cemetery in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->