சமையல் பாத்திரங்களை கழுவிய பள்ளி மாணவர்கள் - தலைமை ஆசிரியர், சமையலர் பணியிடை நீக்கம்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை வெள்ளிமலை அருகே இன்னாடு என்ற கிராமத்தில் அரசு மலைவாழ் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அங்கேயே தங்கி படித்து வருகின்றனர். 

இவர்களுக்கு அருகில் உள்ள சமையல் அறையில் உணவு சமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. அப்படி சமையல் செய்யும் பாத்திரங்களை அங்குள்ள சமையலறோ அல்லது உதவியாளரோ கழுவாமல் பள்ளியில் தங்கி படிக்கும் மாணவிகளே சமையல் பாத்திரங்களை கழுவி வந்துள்ளனர்.

இந்த நிலையில் சமையல் அறை பாத்திரங்களை பள்ளியில் படிக்கும் மாணவிகளே கழுவியதை ஒருவர், தனது செல்பானில் வீடியோவாக எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மாணவிகளை பள்ளி வேலைக்கு ஈடுபடுத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

இதையடுத்து மாணவிகளை பாத்திரங்கள் கழுவவிடும் பணியில் ஈடுபட வைத்த அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெபஸ்டின், பள்ளி சமையலர் ராதிகா உள்ளிட்டோரை பணியிடை நீக்கம் செய்து கள்ளக்குறிச்சி மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

head master and cook suspend for school student wash cooking untensils in kallakurichi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->