அரசு பள்ளியில் சான்றிதழ் பெற லஞ்சம் கேட்ட தலைமை ஆசிரியர் - பிளான் போட்டு சிக்க வைத்த முன்னாள் மாணவர்!  - Seithipunal
Seithipunal


தர்மபுரி, அமானி மல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் படித்த பள்ளியான அமானி மல்லாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் தமிழ் வழி கல்வி சான்று கேட்டுள்ளார். 

தமிழ் வழி கல்வி சான்று வழங்க வேண்டும் என்றால் பள்ளிக்கு நோட்டுகள், பேப்பர் பண்டில்கள் போன்றவற்றை வாங்கி தருமாறு தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். 

சிறிது நேரம் கழித்து நோட்டுகள், பேப்பர் பண்டுகளை எல்லாம் நாங்களே வாங்கிக் கொள்கிறோம் அதற்கான பணத்தை மட்டும் நீங்கள் கொடுத்து விடுங்கள் எனக்கு தெரிவித்து ரூ. 300 அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவரிடம் கொடுக்குமாறு தெரிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து கார்த்திக் பணத்தை அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு பின்னர் சான்றிதழை வாங்கி வந்துள்ளார். மேலும் கார்த்திக் பணம் கொடுத்ததை செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார். 

வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதால் தலைமை ஆசிரியர் மாற்றுச் சான்றிதழ், இது போன்ற சான்றிதழ் வாங்க வருபவர்களிடம் கட்டாயப்படுத்தி பணம் வாங்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பாக மாவட்ட கல்வித்துறை மற்றும் தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் மாணவர் கார்த்திக் கோரிக்கை விடுத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

headmaster certificate give bribe in Govt school 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->