தமிழகத்தில் இன்றுடன் முடிவடையும் வெயில்.. வெதர்மேன் கொடுத்த குட் நியூஸ்.!
Heatwave decrease from today weather reporter pradeep John
தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இன்று முதல் படிப்படியாக குறையும் என்ற தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கத்திரி வெயில் முடிந்தும் பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் கொளுத்தி வருகிறது. மேலும் வெயில் வாட்டி வதைத்தாலும் மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சனலம் காரணமாக ஒரு சில இடங்களில் மழையும் பெய்து வருகிறது.
இந்த நிலையில் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மேலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் வெயிலில் தாக்கம் படிப்படியாக குறைந்து முடிவுக்கு வரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த வகையில் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நாளை முதல் மழை பெய்ய தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்
English Summary
Heatwave decrease from today weather reporter pradeep John