மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை.. தென்காசியில் அணைகளின் நீர் மட்டம் கிடு கிடு உயர்வு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நாங்குநேரி, அம்பை, ராதாபுரம், களக்காடு  உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு புறநகர்ப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு வரை கனமழை பெய்துள்ளது.

மேலும் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் சில பகுதிகளில் சாரல் மழையும் பெய்து வருவதால், அங்கு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. 

இதையடுத்து தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர் மட்டம் 97.15 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக 2800 கன அடியாக வந்து கொண்டிருந்த தண்ணீர், தற்போது 4800 கன அடியாக உயர்ந்துள்ளது. 

அதே போல் சேர்வலாறு அணையின் நீர் மட்டமும் 7 அடி உயர்ந்து 112.53 அடியாக உள்ளது. மேலும் மணி முத்தாறு அணையின் நீர் மட்டம் 78.44 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் கொடுமுடியாறு அணையின் நீர் மட்டம் 50 அடி வரை உயர்ந்துள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 52.25 கன அடி என்பது குறிப்பிடத்தக்கது. 


 தொடர்ந்து திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் மேலும் அந்த மாவட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy Rain in Western Ghats Tenkasi Dams to be Filled


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->