கொட்டி தீர்த்த கனமழை! நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு! - Seithipunal
Seithipunal


கோவை : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக  நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கன மழை பெய்து வருகிறது. மலையை ஒட்டி உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. நேற்று இரவு கோவையில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்தது.

கனமழை காரணமாக ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நோய்யல் ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று மேற்கு தொடர்ச்சி மலைகள் ஒட்டி பகுதிகளில் கனமழை பெய்தது குறிப்பாக சிறுபானை அணை நீர் பிடிப்பு பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தடுப்பணைகள், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான  சித்திரைச்சாவடி தடுப்பணையில் தண்ணீர் வெளியேறி வருகிறது.

வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வெளியேறி பேரூர்குளம், குறிஞ்சிகுளம், சொட்டையாண்டி குட்டை உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ள நிலையில், நீர்வரத்தைக் காண அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதால் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain poured down Flooding in the Noyyal River


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->