தகாத உறவில் ஆண் நண்பரின் 3-1/2 வயது மகனைக் கொன்ற ஆயுள் தண்டனைக் கைதி பூவரசியை விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு..!!
High Court Ordered Life Prisoner Poovarasi ToBe Released Earlier
சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பூவரசிக்கும், அதே நிறுவனத்தில் பணிபுரிந்த திருமணமான அவரது ஆண் நண்பருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. அந்த ஆண் நண்பருக்கு 3-1/2 வயதில் ஒரு மகன் இருந்துள்ளார்.
இந்நிலையில் பூவரசியுடனான உறவை அறிந்த அந்த ஆண் நண்பரின் மனைவி இருவரையும் கண்டித்துள்ளார். இதையடுத்து அந்த நபர் பூவரசியை விட்டு விலகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூவரசி கடந்த 2010ம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி அந்த நபரின் 3-1/2 வயதேயான மகனை கழுத்தை நெரித்துக் கொன்று, சூட்கேசில் அடைத்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்தில் விட்டுச் சென்றுள்ளார்.
இதையடுத்து இந்த கொலை வழக்கில் கைதான பூவரசி கடந்த 2011ம் ஆண்டில் இருந்து ஆயுள் கைதியாக சிறையில் உள்ளார். இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகளை நன்னடத்தை அடிபப்டையில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு முன்கூட்டியே விடுவிக்கும் தமிழக அரசின் 2021ம் ஆண்டின் அரசாணைப் படி முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி பூவராசியின் உறவினர் மணிகண்டன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம். எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு "பூவரசி 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். எனவே நன்னடத்தை அதிகாரியின் அறிக்கைப்படி அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.
English Summary
High Court Ordered Life Prisoner Poovarasi ToBe Released Earlier