சங்கரன்கோவிலில் பதற்றம்.. தி.க பொதுக்கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து அமைப்பினர் கைது..!! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியில் திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பங்கேற்க இருந்ததால் இரண்டு நாட்களுக்கு முன்பே இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

ஆனால் அதனை மீறி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதால் நேற்று இந்து அமைப்பினர் திருவாசகம் பாடி சங்கர கோயிலில் வடக்கு ரத வீதியில் ஊர்வலம் சென்றனர். அனுமதி இன்றி ஊர்வலம் சென்றதால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்.

இதன் காரணமாக இந்து அமைப்பினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அவர்களை கைது செய்த போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பேருந்தில் ஏற்றினர். 

அதனை மீறி இந்த அமைப்பினர் ஊர்வலம் செல்ல முயன்ற போது இழுத்துச் சென்று பேருந்தில் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பொழுது சங்கரன்கோவில் டிஎஸ்பி அசோக் மிடல் இந்து அமைப்பினரை பார்த்து தொலைத்து விடுவேன் என மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் சங்கரன்கோவில் வடக்கு ரத வீதி போர்க்களம் போல் காட்சியளித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hindus arrested for protest against Dravidia kazhagam public meeting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->