புதுக்கோட்டையில் கோர விபத்து!....அரசு கார் மீது பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டு இருவர் பலி! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியராக செயல்பட்டு வரும் ஐஸ்வர்யா, இன்று பணி நிமித்தமாக திருமயம் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்துள்ளார். இதற்கிடையே இந்த காரை ஓட்டுநர் காமராஜ் ஓட்டி வந்த நிலையில், தொடர்ந்து புதுக்கோட்டை நமணசமுத்திரம் அருகே கார் சென்று கொண்டிருந்துள்ளது.

அப்போது சாலையில் எதிரே அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் வந்ததை தொடர்ந்து, அரசு பேருந்தை   முந்திச் செல்ல முயன்ற இருசக்கர வாகனம், எதிரே வந்த வருவாய் கோட்டாட்சியரின் கார் மீது வேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், வருவாய் கோட்டாட்சியரின் கார் ஒட்டுநர்  காமராஜுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த கார் ஓட்டுனரை  சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Horrible accident in Pudukottai Two people were killed when a bike collided with a government car


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->