நாமக்கல் அருகே கோர விபத்து!...சரக்கு வாகனம் நொறுங்கியதில் 3 வாலிபர்கள் உயிரிழந்த சோகம்! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அடுத்த வெங்கரை பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில், இவர் நேற்று சரக்கு வாகனத்தை இயக்கி உள்ளார்.அதன்படி,  ஈரோடு அருகே உள்ள திருமண மண்டபத்தில் மணவறை அலங்கார பொருட்களை இறக்கிவிட்டு, பின்னர் அங்கிருந்து அலங்கார பொருட்கள் வேலையாட்களுடன் கபிலர்மலைக்கு திரும்பி உள்ளார்.

தொடர்ந்து நள்ளிரவு 2 மணிக்கு அவர் சென்று கொண்டிருந்த போது, பரமத்தியில் இருந்து ஜேடர்பாளையம் நோக்கி எதிரே வந்த லாரியும், சரக்கு வாகனமும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

இந்த கோர விபத்தில் சரக்கு வாகனம் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், அலங்கார பொருட்கள் வேலையாட்களான சக்திநாதன், சிவா,  பூமிஷ் ஆகிய 3 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும்,  படுகாயம் அடைந்த ஓட்டுநர்  ரமேஷ், சாமிநாதன் ஆகியோர் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Horrible accident near namakkal tragedy 3 teenagers died in a cargo vehicle crash


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->