ஓசூரில் பயங்கரம்!...வழக்கறிஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு! - Seithipunal
Seithipunal


ஓசூர்  நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிர் ஒருவரை சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது

கிருஷ்ணகிரி  மாவட்டம், ஓசூரில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. வழக்கறிஞர் கண்ணன் என்பவர் வழக்கு விசாரணைக்காக இன்று நீதிமன்றத்திற்கு வந்ததாக சொல்லப்படுகிறது.

அப்போது, நீதிமன்றத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வழக்கறிஞர் கண்ணனை சரமாரியாக வெட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த நிலையில், உடன் இருந்த வழக்கறிஞர்கள் அவரை மீட்டு சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

மருத்துவமனையில் தற்போது வழக்கறிஞர் கண்ணன் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், வழக்கறிஞரை தாக்கிய மர்ம நபர் யார் என்று தற்போது வரை தெரியாத சூழ்நிலையில், அவர் முன்விரோதம் காரணமாக வெட்டினாரா அல்லது கூலிப் படையை சேர்ந்தவரா?உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Horrible in hosur barrage of scythes for lawyer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->