ஒசூர் முதல் பெங்களூரு வரை மெட்ரோ ரயில்! தொடங்கியது ஆய்வு! - Seithipunal
Seithipunal


ஒசூர் முதல் பெங்களூரு வரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் குழுவினர் மற்றும் ஆலோசகர்கள் நேரடியாக ஆய்வு செய்துள்ளனர்.

ஒசூர் முதல் தமிழகம் - கர்நாடகாவின் எல்லை பகுதியான அத்திப்பள்ளி வழியாக பொம்மசந்திரா வரை 23 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி மற்றும் தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தபடி, அத்திபள்ளி வழியாக ஓசூர் முதல் பொம்மசந்திரா வரை விரைவான போக்குவரத்து அமைப்பை (MRTS) அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்த விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை இறுதி செய்வதற்கான ஒரு நடவடிக்கையாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் இன்று (27.08.2024) பெங்களூர் மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எம். மகேஷ்வர் ராவ் சந்தித்து, ஓசூர் முதல் பொம்மசந்திரா வரை உள்ள மெட்ரோ பாதையின் முக்கிய அம்சங்களைப் பற்றி ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் குழுவினர் மற்றும் ஆலோசகர்கள் ஓசூர் பகுதிகளை நேரடியாக பார்வையிட்டு. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு. இ.ஆ.ப., மற்றும் ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் திரு. எச்.எஸ். ஸ்ரீகாந்த், இ.ஆ.ப., ஓசூர் துணை ஆட்சியர் திருமதி. பிரியங்கா இ.ஆ.ப., ஆகியோரை சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினர்.

அத்திபள்ளி வழியாக பொம்மசந்திரா முதல் ஓசூர் வரை மொத்தம் தோராயமாக 23 கி.மீ நீளத்திற்கு, தமிழ்நாட்டில் 11 கி.மீ. மற்றும் கர்நாடகாவில் 12 கி.மீ. நீளம் கொண்ட இந்த பாதை 12 மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் ஒரு பணிமனையை உள்ளடக்கியதாக அமையும். இந்த கூட்டத்தில் விரைவான போக்குவரத்து அமைப்பை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஓசூர் மற்றும் பெங்களூரு இடையேயான போக்குவரத்து இணைப்பு மேம்ப்படுத்தப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hosur Bangalure Metro CMRL


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->