திருவண்ணாமலை || மண்ணில் புதைந்த வீடு - 7 பேரின் கதி என்ன?
house stuck landslide in thiruvannamalai
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த புயல் நேற்று முன்தினம் கரையை கடந்த நிலையிலும் தொடர் கனமழையால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.
இந்த நிலையில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையிலிருந்து சரிந்த பாறைகள் வீடுகள் மீது விழுந்தன. இந்தப் பாறைகளுடன் மண்ணும் சரிந்ததால் 3 வீடுகள் மண்ணிற்குள் புதைந்துள்ளன.
மண்ணில் புதைந்த வீட்டிற்குள் 5 குழந்தைகள், இரண்டு பெண்கள் என்று மொத்தம் 7 பேர் உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஆட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் மீட்புப்பணிக்கான NDRF வீரர்கள் வரவழைக்கப்பட்டு தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. ஏழு பேரின் நிலை என்னவென்று எந்த தகவலும் கிடைக்கவில்லை.
English Summary
house stuck landslide in thiruvannamalai