தொடரும் அட்டூழியம்.. குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு - விருத்தாச்சலம் அருகே பரபரப்பு!
human waste at water tank in viruthachalam
கடலூர் மாவட்டத்தில் உள்ள, விருத்தாசலம் குட்டக்கார தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ் இவருக்கும், இவரது அண்ணன் மனைவி மகாலட்சுமி என்பவருக்கும், கடந்த ஒரு வருடமாக சொத்து பிரச்சினை இருந்து வருகிறது.
இந்த நிலையில், வெங்கடேஷ் வீட்டில் குடிநீர் குழாயில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், சந்தேகமடைந்த அவர் மொட்டை மாடியில் உள்ள சின்டெக்ஸ் டேங்கை திறந்து பார்த்துள்ளார். அதில், வெள்ளை நிற பனியன் துணியில், மனிதக் கழிவை சுருட்டி உள்ளே போடப்பட்டது தெரியவந்தது.
இதைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த வெங்கடேஷ், அவரது அண்ணி மகாலட்சுமி இதனை செய்திருக்கலாம் என விருத்தாசலம் காவல்துறையிடம் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் படி வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தலைமறைவான மகாலட்சுமியை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பொது குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரத்திலேயே இதுவரை உறுதியான முடிவுகள் எட்டப்படாத நிலையில், அதே பாணியில் பல்வேறு இடங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
human waste at water tank in viruthachalam