கன்னியாகுமரி: சி.எஸ்.ஐ கிறிஸ்துவ ஆலயத்தில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள அச்சன்குளத்தில் சி.எஸ்.ஐ கிறிஸ்துவ ஆலயம் உள்ளது. இங்கு நேற்று பிரார்த்தனை முடிந்ததும் இரவு ஆலயத்தை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இதையடுத்து இந்த ஆலயத்தின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆலைய நிர்வாகிகள் இதுகுறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஆலயத்துக்கு சென்று பார்வையிட்ட போது அந்த ஆலயத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது.

அந்த உண்டியல் இருந்த பணம் மொத்தமும் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் அந்த ஆலயத்துக்குள் இருந்த ஹம்ப்ளிபயர், ஒலிபெருக்கி பெட்டி, மைக் போன்ற பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் மதிப்பு ரூபாய் 1.50 லட்சம் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து உண்டியலை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hundial broke open in CSI church in kanniyakumari


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->