தொடங்கியது நூற்றாண்டு பழமை வாய்ந்த பள்ளிகளை புதுப்பிக்கும் பணி! பள்ளிகளின் விவரங்களை அனுப்பி வைக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ரூ. 25 கோடி செலவில் 100 ஆண்டுகள் பழமையான அரசுப் பள்ளிகளில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில்,

தமிழகத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசுப் பள்ளிகளில் நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்பட இருப்பதாகவும், இதற்காக அந்தப் பள்ளியில் உள்ள பாரம்பரிய, புராதனக் கட்டிடங்களை பழமைமாறாமல் புதுப்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி வளாகத்தைச் சீரமைத்தல், கட்டிடங்களுக்கு வெள்ளை அடித்தல், மின்சாதனப் பொருட்களை பழுதுபார்த்தல் உள்ளிட்ட சீரமைப்புப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டி இருப்பதாகவும், தமிழ் அறிஞர்கள், தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பல்துறை சாதனையாளர்கள் படித்த பள்ளிகளிலும் இந்த சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளிகளில் உள்ள நூலகங்களில் இருக்கும் அரிய நூல்கள் மற்றும் தலைவர்கள் பற்றிய ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பாதுகாக்கப்படும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தங்கள் பகுதியில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசுப் பள்ளிகள் மற்றும் தலைவர்கள் படித்த பள்ளிகளின் விவரங்களை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு துரிதமாக அனுப்பிவைக்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள் ரூ.25 கோடி செலவில் மேற்கொள்ளப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hundred year old schools renovation work


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->