மின் கட்டண உயர்வை கண்டித்து அக்.16ல் உண்ணாவிரத போராட்டம்!
Hunger protest on Oct16 against increase in electricity rates
சென்னையில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி திட்டமிட்டபடி கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தொழித்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் மின் கட்டணத்தை திரும்ப பெறுவது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் தொழில் முறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. மேலும் தொழில்முறை மின் நுகர்வோரின் ஐந்து அம்ச கோரிக்கையை தமிழக அரசு ஏற்க மறுத்துவிட்டது.
இதனால் வரும் அக்டோபர் 16ஆம் தேதி தொழில்முறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினரின் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோபி பழனியப்பன் "வேலை நிறுத்த போராட்டத்தின் போது இரண்டு மூன்று நாட்களில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நல்ல தீர்வை கொடுப்பார் என வாக்குறுதி அளித்திருந்தனர்.
அதன் அடிப்படையில் இன்று அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தங்களுக்கான எந்த தீர்வும் கிடைக்கவில்லை. மேலும் எங்களின் 5 அம்ச கோரிக்கைகளில் மிக முக்கியமானதான ஆண்டுக்கு ஒரு முறை மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. இதனால் வரும் அக்டோபர் 16ஆம் தேதி சென்னையில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை" என தெரிவித்துள்ளார்.
English Summary
Hunger protest on Oct16 against increase in electricity rates