தற்கொலை செய்து கொண்ட காதல் மனைவி.. கணவன் செய்த விபரீத செயல்..!
Husband Committed Suicide due to death Wife
மனைவி தற்கொலை செய்து கொண்டதால் கணவன் ரயிலில் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவிகுமார். மெக்கானிக்கான இவர் அதே பகுதியை சேர்ந்த சரண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாட்டால் தகராறு ஏற்பட்டது.
இதனால், மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல்கள் அறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனைவி இறந்த துக்கத்தில் ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது அங்கு வந்த சரக்கு ரயில் அவர் மீது மோதியதில் உடல் சிதறி பரிதாபமாக பலியானார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணமான நான்கே மாதத்தில் ஜோடி திருமணம் செய்து கொண்ட தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Husband Committed Suicide due to death Wife