குடும்ப தகராறு.. மனைவியை குத்தி விட்டு கணவன் தற்கொலை.. கோவை அருகே நிகழ்ந்த சோகம்..!
Husband Committed Suicide Near Coimbatore
குடும்ப தகராறு காரணமாக மனைவியை குத்திவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், கண்ணுரை சேர்ந்தவர் பூபாலன் இதற்கு திருமணம் ஆகி சாலினி என்ற மனைவியையும் இரு குழந்தைகளும் உள்ளனர். பூபாலனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது . சாலினி அவரிடம் கோபித்துக் கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அன்னூரில் தனியாக வசித்து வரும் பூபாலம்ன் குழந்தைகளை அடிக்கடி தன் குழந்தைகளை பார்த்து செல்வது வழக்கமாகக் கொண்டுள்ளார் . அப்போதும் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று அவர் வழக்கம் போல குழந்தைகளை பார்த்துவிட்டு அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது கணவன் மனைவிக்கு இடையே நகர ஏற்பட்டுள்ளது ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றமே அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். அதனை எடுத்து பூபாலன் இரவு ஷாலினி வீட்டிலேயே இருந்துள்ளார். நள்ளிரவில் தொடங்கிய சண்டை அதிகாலை வரை தொடர்ந்துள்ளது ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பூபாலன் வீட்டில் இருந்த கத்தியால் சாதனையைக் குத்தியுள்ளார்.
இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய அவளை அக்கம் பக்கத்தினர் வீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மனைவி இறந்து விட்டதாக நினைத்த பூபாலன் காவல்துறையினர் கைது செய்து விடுவார்களோ என பயந்து தற்கொலை செய்து கொண்டார் . இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராற்றால் மனைவியை குத்தி விட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வந்து பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Husband Committed Suicide Near Coimbatore