மாமாக்குட்டி கூப்ட்டாலும் போகாதீங்க.! ஐ.ஏ.எஸ் அதிகாரியின் நூதன எச்சரிக்கை பதிவு.!
IAS officer vijayakarthikeyan warning Post viral
'மாமாக்குட்டிகள் கூப்பிட்டாலும் லாங் டிரைவ் போகாதீங்க' என்று ஐ.ஏ.எஸ் வேடிக்கையாக எச்சரித்துள்ள பதிவு வைரலாகி வருகின்றது.
வங்க கடலில் கடந்த 5-ந் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நேற்று முன்தினம் புயலாக வலுவடைந்தது.
இதனால், தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாண்டஸ் புயல் நேற்று இரவு 3 மணியளவில் சென்னை மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.
அந்த நேரத்தில் மணிக்கு 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.புயல் காரணமாக சென்னையில் பெரும்பான்மையான பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. அதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது ஈ.சி.ஆர் சாலையில் பயணிக்க நேற்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு பலரிடம் சுவாரஸ்யத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. அவரது பதிவில், " மாமாக்குட்டிகள் ஈ.சி.ஆரில் லாங் டிரைவ்-க்கு அழைத்தாலும் செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
IAS officer vijayakarthikeyan warning Post viral