தமிழகத்தின் மரமான பனை மரம் வறட்சியால் கருகும் சோகம்.! வெளியான அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


இந்திய முழுவதும் கடும் வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் கடுமையான துன்பத்தை அனுபவித்து வரும் நிலையில்., தமிழகத்திலும் வெயிலின் தாக்கமானது கடுமையாக இருந்து வருகிறது. தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் வெயிலின் தாக்கமானது எளிதாக 100 டிகிரி செல்ஸியஸை விட அதிகமாக அடித்து வருகிறது. 

இந்த நிலையில்., புதுக்கோட்டை மாவட்டத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தாக்கிய கஜா புயலின் காரணமாக மக்கள் கடுமையான துன்பத்தை அனுபவித்து வைத்தனர். இந்த நிலையில்., புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளம் மற்றும் திருமயம் பகுதியில் கடுமையான வறட்சியானது ஏற்பட்டு வருகிறது. 

புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியான அரிமளம்., திருமயம் பகுதிகளில் அதிகளவு பனை மரங்கள் உள்ளது. அங்குள்ள விவசாயிகள் அதிகளவு பனை மரங்களை சுமார் 25 வருடங்களுக்கு முன்னதாக விளைவித்ததன் மூலமாக பனை மரத்தின் பொருட்களில் இருந்து வரும் வருமானம் மூலமாக தங்களின் வாழ்க்கையை நடத்தி வந்தனர். 

இதுமட்டுமல்லாது பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் நுங்கு., பனை ஓலைகளை விற்பனை செய்வதன் மூலமாக தங்களின் வாழ்க்கையை நடத்தி வந்தனர். இந்த நிலையில்., அதிகளவு அடிக்கும் வெயில் மற்றும் மழையில்லாததன் காரணமாக பனை மரங்கள் அனைத்தும் கருகியுள்ளது. 

இந்த பனை மரத்தின் உதவியால் ஆற்றங்கரைகள் மற்றும் கண்மாய்களின் கரைகள் மழை காலங்களில் உடைக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டு., நுங்கு மற்றும் பதிநீரை விற்பனை செய்து வந்த நிலையில்., தற்போது வறட்சியின் காரணமாக பனை மரங்கள் அனைத்தும் கருகிக்கொண்டு வருவதால் மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in puthukottai district panai tree is fall due to summer season


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->