அண்ணனின் கண் முன்னே சிறுமிக்கு நடந்த கொடூரம்.! துடிதுடித்த சிறுமி., கண்ணீரில் கதறிய அண்ணன்.!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியை சார்ந்தவர் சையது ரபீக். இவர் சவுதி அரேபியாவில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மூன்று குழந்தைகள் உள்ளனர். 

இவர்கள் இருவரும் சூரமங்கலத்தில் வசித்து வரும் நிலையில்., பணிக்காக சென்ற ரபீக் பணி நிறைவு பெற்றதை அடுத்து சேலத்திற்கு திரும்பியுள்ளார். அந்த நேரத்தில்., குழந்தைகளுக்கு பள்ளி செயல்பட்டு வந்ததை அடுத்து மாலையில் அவர்கள் இல்லத்திற்கு திரும்பியதை அடுத்து அவர்களை காணலாம் என்று இருந்துள்ளார். 

இந்த நிலையில்., தனது சகோதரருடன் வழக்கம் போல பள்ளிக்கு சென்ற குழந்தை ஆயிஷா., பேருந்தில் இருந்து இறங்கி பள்ளியின் மைதானத்தில் நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார். 

அந்த நேரத்தில் பள்ளியின் பேருந்தானது பின்புறமாக வந்து கொண்டு இருந்துள்ளது. பேருந்தின் ஓட்டுநர் சிறுமியை கவனிக்காமல் பேருந்தை பின்புறமாக செலுத்தியதை அடுத்து., தனது சகோதரரின் கண் முன்னரே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவத்தை கண்ட பள்ளி நிர்வாகமானது செய்வதறியாது திகைக்கவே., தகவலை அறிந்த காவல் துறையினர் உடனடியாக குழந்தையின் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in selam a girl died by school poor activities when handling bus reverse direction


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->