மகளை பலாத்காரம் செய்த கொடூரனை நடுவீதியில் ஓடவிட்டு வெட்டிய தந்தை.!! தேனியில் பரபரப்பு.!!  - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்திலுள்ள சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டி சார்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன் (வயது 45). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். 

இவரது வீட்டிற்கு எதிர்ப்புறமாக வசித்து வந்தவரின் பெயர் கோச்சடையான். இவரது மகள் மாற்றுத்திறனாளி ஆவார். இவரது மகளை ரத்தினவேல் பாண்டியன் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு., வீட்டில் தனியாக இருக்கும்போது கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து வந்துள்ளான். 

பெண்ணை மாற்றுத்திறனாளி என்றும் பாராது பலாத்காரம் செய்து., கொலை மிரட்டலும் விடுத்துள்ளான். இதனால் பயந்து போன பெண் யாரிடமும் தெரிவிக்காமல் இருக்கவே., இந்த தகவலானது கோச்சடையானுக்கு தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து கோச்சடையான் தனது உறவினர்களிடம் கூறி ரத்தினவேல் பாண்டியனை கண்டித்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்ளாத இரத்தினவேல் பாண்டியன்., இந்த செயலை தொடர்ந்து செய்து வந்த நிலையில் ஊர் பெரியவர்களிடம் விஷயத்தைக் கூறி எச்சரித்து அனுப்பியுள்ளனர். 

இந்த நிலையில்., இந்த சம்பவம் நடந்த சில மாதங்களிலேயே கோச்சடையான் மகள் பரிதாபமாக உயிரிழந்தார். அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கடந்த வருடங்களாக அமைதியாக இருந்த நிலையில்., இன்று காலை ரத்தினவேல் பாண்டியன் தோட்டத்திற்கு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தான். 

அந்த சமயத்தில்., அவரை இடைமறித்த கோச்சடையான் மற்றும் 2 பேர் அரிவாளால் வெட்ட முயற்சிக்கவே., உயிருக்கு பயந்த ரத்தினவேல் பாண்டியன் தலைதெறிக்க ஓடினான். 

இவர்களை விரட்டி பிடித்த கோச்சடையான் மற்றும் அவரது உறவினர்கள் நடுரோட்டில் ஓடவிட்டு வெட்டிக்கொன்றனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர்., கொலை செய்யப்பட்ட ரத்தினவேல் பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in theni a father killed a man when his daughter rapped


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->