இலங்கைக்கு மட்டும் வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கியது இந்தியா.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் வெங்காய தட்டுப்பாடு இன்றி கிடைப்பதை உறுதி செய்ய மற்றும் விலை உயர்வை கட்டுக்குள் வைக்க வெங்காயத்திற்கான ஏற்றுமதியை மத்திய அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரை தடை விதித்திருந்தது. 

அதனை தொடர்ந்து தற்போது மக்களவைப் பொது தேர்தல் நடைபெறுவதால் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தலையை கால வரையறையின்றி நீட்டித்தது மத்திய அரசு.

இதன் காரணமாக இந்தியாவின் வெங்காயத்தை நம்பி இருக்கும் இலங்கை, வங்கதேசம், நேபாளம், ஐக்கிய அமீரகம், மலேசியா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் மத்திய அரசு இலங்கைக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு சிறப்பு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. 

இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை நட்பு நாடு என்ற அடிப்படையில் வெங்காய ஏற்றுமதி மீதான தடையை இந்திய அரசு நீக்கி உள்ளது. அத்துடன் 10,000 மெட்ரிக் டன் வெங்காயத்தை இந்தியா இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India has lifted the ban on onion exports


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->