வர்மக்கலை! சிக்கலில் இந்தியன் 2! தடை கேட்ட வழக்கில் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


இந்தியன் 2 திரைப்படம் வருகின்ற ஜூலை மாதம் 12-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தை வெளியிடக்கூடாது என்று ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

லைகா நிறுவனம் தயாரிப்பில், பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் வருகின்ற ஜூலை மாதம் 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, பட குழுவினர் இத்திரைப்படம் வெளியாவதற்கான வேலைகளை தீவிரமாக பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த வர்மக்கலை தலைவர் ராஜேந்திரன் என்பவர் இப்படத்தை வெளியிடக் கூடாது, தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவரின் அந்த மனுவில், "இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படத்தின் முதலாம் பாகத்தில் கமல்ஹாசன் பயன்படுத்தும் வர்மக்கலை குறித்த முத்திரை பயன்படுத்தப்பட்டது. மேலும், என்னிடம் ஆலோசித்து அந்த படத்தில் எனது பெயரும் பயன்படுத்தப்பட்டது. 

முதலாம் பாகத்தில் கமல்ஹாசன் பயன்படுத்தியுள்ள வர்மக் கலை முத்திரை படங்கள், தற்போது, வெளியாக இருக்கும் இந்தியன் 2 படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இது குறித்து எங்களிடம் எந்த ஆலோசனையும் கேட்கப்படவில்லை.

எனவே இத்திரைப்படத்தை வெளியிடக் கூடாது. மேலும், இத்திரைப்படம் திரையரங்குகள், ஓ.டி.டி. தளங்களிலும் வெளியிட கூடாது, நிரந்தர தடை விதித்து உத்தரவிடவேண்டும்". என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், எதிர் மனுதாரர்களாக தயாரிப்பாளர் சுரேஷ்கரன், இயக்குனர் சங்கர், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் மனு குறித்த  ஆட்சேபனையை வழக்கறிஞர் மூலமாக பதில் அளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை வருகின்ற ஜூலை மாதம் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian 2 varmakalai issue Court order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->