பக்ரைனில் காணாமல் போன குமரி மீனவர்கள்.! இந்திய அரசை வலியுறுத்தி சீமான் அறிக்கை.! - Seithipunal
Seithipunal


பக்ரைன் நாட்டில் மீன்பிடிப்பதற்காக சென்று நடுக்கடலில் காணாமல்போன இரண்டு குமரி மீனவர்களை மீட்பதற்கு இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து, சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது:- "கன்னியாகுமரி மாவட்டம், கடியப்பட்டணம் மீனவக் கிராமத்தைச் சார்ந்த மீனவர்களான சகாய செல்சோ மற்றும் ஆண்டனி வின்சென்ட் ஆகிய இருவரும் குடும்பத்தின் வறுமை காரணமாக வளைகுடா நாடான பக்ரைனில் மீன்பிடிக்கும் பணிக்கு சென்ற நிலையில், கடந்த 17 ஆம் தேதி அவர்கள் இருவரும் நடுக்கடலில் காணாமல் போனச் செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். 

மீனவர்கள் இருவரும் காணாமல் போய் ஒரு வாரத்திற்கு மேலாகியும் இதுவரை மீட்கப் படாதது அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்களைத் தேடி மீட்கும் பணியில் பக்ரைன் அரசு தீவிர முயற்சி மேற்கொள்ளவில்லையோ என்று அவர்களது குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். 

இந்த சம்பவம் குறித்து பலமுறை அவர்கள் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை அதற்கான எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாதது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு இந்திய அரசினை வலியுறுத்தி பக்ரைன் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி காணாமல் போன இரு குமரி மீனவர்களையும் மீட்டு அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். 

மேலும் அனைத்து வளைகுடா நாடுகளிலும் உள்ள இந்தியத் தூதரகங்களைத் தொடர்புகொண்டு தமிழக மீனவர்களை மீட்பதற்கு தேவையான அனைத்து உதவிகளைப் பெற்றிட வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக இந்திய அரசினை வலியுறுத்துகிறேன்". என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian fisherman missing in bagrain sea seman report


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->